மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

உக்ரைனில் ரஷியப் படைகள்: நேட்டோ நாடுகள் நாளை (பிப்.25) அவசர ஆலோசனை

உக்ரைனில் நுழைந்து ரஷியப் படைகள் தாக்குதல் நடத்திவரும் சூழலில் நாளை நேட்டோ நாடுகள் அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளன.

News image
உக்ரைனில் ரஷியப் படைகள்: நேட்டோ நாடுகள் நாளை (பிப்.25) அவசர ஆலோசனை
Updated On :24 பிப்ரவரி 2022, 12:04 pm

DIN

உக்ரைனில் நுழைந்து ரஷியப் படைகள் தாக்குதல் நடத்திவரும் சூழலில் நாளை நேட்டோ நாடுகள் அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளன.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் கடந்த சில தினங்களாக இருநாட்டின் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. அதனைத்  தொடர்ந்து உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் ரஷியா தனது படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டை எழுப்பியது.

இந்நிலையில் இன்று காலை உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷிய அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ரஷியப் படைகள் கிழக்கு உக்ரைன் வழியாக அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 

ரஷியாவின் தாக்குதலுக்கு நேட்டோ அமைப்பின் நாடுகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் போர் சூழல் தொடர்பாக விவாதிப்பதற்காக நாளை நேட்டோ நாடுகளின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில் நேட்டோ அமைப்பு நாடுகளின் அவசரக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.