புதின் சொத்துகளை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்
ரஷிய அதிபர் புதின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் சொத்துகளை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.


ரஷிய அதிபர் புதின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் சொத்துகளை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐரோப்பிய நாடான உக்ரைன்-ரஷியா இடையே கடந்த பல நாள்களாகவே போா்ப் பதற்றம் நிலவி வந்தது. நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது நேற்று பலமுனைத் தாக்குதல்களை தொடங்கியது.
ரஷியா தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் உலகின் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இருப்பினும் உக்ரைன் தலைநகர் கிவ்வை நோக்கி ரஷியா ராணுவம் தொடர்ந்து 2-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் சொத்துகளை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலுள்ள இருவரது சொத்துகளையும் முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...