பிரிட்டன் விமானங்கள் ரஷிய வான்வெளிப் பகுதிகளில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த் தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளன. தற்போது தலைநகர் கீவ் வரை வந்துள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
ரஷியா - உக்ரைன் போர் குறித்து உலக நாடுகள் பல கவலை தெரிவித்ததுடன் போரை நிறுத்தவும் வலியுறுத்தி வருகின்றன.
ஏற்கெனவே உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கையில் ரஷியா மீது அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, ரஷியா மீது பிரிட்டன் நேற்று(பிப்.25) பொருளாதாரத் தடை விதித்ததுடன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் நாட்டினரை அடிபணியச் செய்ய நினைக்கும் ஒரு சர்வாதிகாரி என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இன்று ரஷிய விமான நிலையங்கள், வான்வெளிப் பகுதிகளில் பிரிட்டன் விமானங்கள் பறக்க ரஷியா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | உக்ரைன் போர்: இந்திய - பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


