ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கீவ் நகர சாலைகளில் கடும் மோதல்; உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்

கீவ் நகரில், முக்கிய சாலைகளில் உக்ரைன் பாதுகாப்புப் படைக்கும், ரஷிய படைகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

News image
கீவ் நகரில் கடும் மோதல்; உக்ரைன் நகரங்கள் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்
Updated On :26 பிப்ரவரி 2022, 1:03 pm

DIN

கீவ் நகரில், முக்கிய சாலைகளில் உக்ரைன் பாதுகாப்புப் படைக்கும், ரஷிய படைகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

கீவ் நகரைச் சுற்றி வளைத்து, நகருக்குள் ரஷிய ராணுவத்தினர் நுழைந்த நிலையில், இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது, ரஷியாவின் ஒருங்கிணைந்த ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்கள் சனிக்கிழமை நடத்தப்பட்டன.

போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கீவ் நகரில், அரசு அலுவலகங்களைக் கைப்பற்றும் வகையில் முன்னேறி வரும் ரஷியப் படைகளைத் தடுக்க, கடுமையான துப்பாக்கிச் சண்டை நடப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் அரசு அலுவலங்கள் முன்பு, ஆயுதம் ஏந்திய அந்நாட்டு வீரர்கள், முன்னேறி வரும் ரஷிய படைகளுக்கு எதிராக கடும் தாக்குதல் நடத்தி வருவதாகவும், ரஷிய படைகளின் ஆதிக்கம் கடுமையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே வேளையில், உக்ரைன் மீது போர் தொடுத்து முன்னேறி வரும் ரஷியப் படைகளை எதிர்கொள்ள கீவ் நகர மக்கள் உக்ரைன் பாதுகாப்புப் படைக்கு உதவுமாறும் பொது மக்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கீவ் நகரின் முக்கிய இடங்களில் ரஷியப் படைகள் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்தி தெரிவிக்கிறது.

கருங்கடலிலிருந்து ரஷியப் படைகள், சுமி, போல்டாவா உள்ளிட்ட நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், ரஷிய மற்றும் உக்ரைன் அரசுகள், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பு விடுத்திருப்பது, ஒரு நல்ல சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.

தலைநகா் கீவில் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே ரஷிய விமானங்கள் குண்டு வீசி தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகின. தனது அரசைக் கவிழ்க்கும் வகையில் நடத்தப்படும் இத்தாக்குதலைத் தடுக்க சா்வதேச நாடுகளின் உதவியை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி கோரியிருந்தார்.

போர் தொடங்கியது எப்போது?

ரஷிய அதிபா் புதினின் அறிவிப்பையடுத்து, உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை போரைத் தொடங்கியது ரஷியா. விமானங்கள் மூலமும், ஏவுகணைத் தாக்குதல் மூலமும் உக்ரைனின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல நகரங்கள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் குண்டுமழை பொழிந்தது ரஷிய ராணுவம். பின்னா், கிழக்கு உக்ரைன், கிரீமியாவின் தென் பிராந்தியம் வழியாகவும், அண்டை நாடான பெலாரஸிலிருந்து வடக்கு நோக்கியும் ரஷிய தரைப் படையினா் உக்ரைனுக்குள் புகுந்தனா். முதல் நாளில் விமான தளங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளை குண்டுவீசி தகா்த்ததாக ரஷிய ராணுவம் தெரிவித்தது. உக்ரைன் தரப்பில் ராணுவ வீரா்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.