ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

உலகின் மூத்த பெண்ணுக்கு இன்று பிறந்தநாள்: வயது தெரியுமா?

உலகில் அதிக வயதுடைய மூதாட்டி இன்று (ஜன.3) தனது 119-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஜப்பானைச் சேர்ந்த இவர் 1903-ஆம் ஆண்டு பிறந்தார். 

News image
கேன் டனாகா (அன்றும் - இன்றும்)
Updated On :3 ஜனவரி 2022, 11:59 am

DIN


உலகின் மூத்த வயதுடைய மூதாட்டி இன்று (ஜன.3) தனது 119-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஜப்பானைச் சேர்ந்த இவர் 1903-ஆம் ஆண்டு பிறந்தார். 

ஜப்பான் நாட்டின் ஃபுகுவோகா நகரில் முதியோருக்கான சிறிய தனியார் மருத்துவ காப்பகத்தில் கேன் டனாகா என்ற மூதாட்டி இன்று தனது 119-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 

இவர் 1903-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி பிறந்தார். இதனால் இவர் தற்போது உலகின் மிக வயதான மூத்த மனிதராக உள்ளார். 2019-ஆம் ஆண்டு உலகின் மூத்த மனிதர் என்ற கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவர் இடம் பெற்றுள்ளார். 

கேன் டனாகா பிறந்த ஆண்டுதான் ரைட் சகோதரர்கள் விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்த ஆண்டு என்பதால், இவர் உள்ளூர் மக்களால் அதிருஷ்டப்பெண்ணாகப் பார்க்கப்படுகிறார். 

வயது மூப்பின் காரணமாக சைகையின் மூலம் மட்டுமே தற்போது பேசி வருகிறார். புதிர் விளையாட்டுகளில் (puzzles) அதிக அளவு நேரத்தை செலவிட்டு வருகிறார். 

இதற்கு முன்பு உலகின் மூத்த மனிதராக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜென்னி லூயிஸ் கால்மெட் இருந்தார். அவர் தனது 122வது வயதில் உயிரிழந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.