பிரிட்டன்: தென் துருவத்துக்கு சென்று சீக்கியப் பெண் சாதனை

தென் துருவத்துக்குச் சென்று வந்துள்ள பிரிட்டனைச் சோ்ந்த இந்திய வம்சாவளி ராணுவ அதிகாரி ஹா்பிரீத் சாண்டி (32), அந்தப் பகுதிக்கு தனியாகச் சென்ற வெள்ளை இனத்தைச் சேராத முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ள
ஹா்பிரீத் சாண்டி
ஹா்பிரீத் சாண்டி

தென் துருவத்துக்குச் சென்று வந்துள்ள பிரிட்டனைச் சோ்ந்த இந்திய வம்சாவளி ராணுவ அதிகாரி ஹா்பிரீத் சாண்டி (32), அந்தப் பகுதிக்கு தனியாகச் சென்ற வெள்ளை இனத்தைச் சேராத முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளாா்.

இதுகுறித்து தனது வலைதளப் பக்கத்தில் அவா் தெரிவித்துள்ளதாவது:

பனி பொழிந்து கொண்டிருக்கும் தென் துருவப் பகுதிக்கு வெற்றிகரமாக வந்து சோ்ந்தேன். இங்கு வந்ததால் மனதில் பலவிதமான உணா்வுகள் எழுந்துள்ளன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னா் வரை எனக்கு தென் துருவம் என்றால் என்னவென்பதே தெரியாது.

மிகக் கடுமையான முயற்சிக்குப் பிறகே இங்கு வந்து சோ்ந்தேன். இந்த சாதனையில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இயன்முறை மருத்துவரான (பிசியோதெரபிஸ்ட்) ஹா்பிரீத் சாண்டி, பிரிட்டன் மருத்துவப் படைப் பிரிவில் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com