விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அமெரிக்காவைத் தொடர்ந்து பாதிக்கப்படும் பிரான்ஸ், இங்கிலாந்து!

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்தில் அதிக அளவு கரோனா தொற்று பரவி வருகிறது.

News image
அமெரிக்காவில் அதிகரிக்கும் கரோனா (கோப்புப் படம்)
Updated On :5 ஜனவரி 2022, 2:56 am

DIN

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்தில் அதிக அளவு கரோனா தொற்று பரவி வருகிறது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.57 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் ஒரு நாளில் மட்டும் 5,57,425 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 1,825 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பின்ராஸ், இங்கிலாந்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

பிரான்ஸில் ஒரு நாளில் 2.71 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 2.18 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.