விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கரோனா விதிகளில் அதிரடி மாற்றம்; பிரிட்டனின் திட்டம் என்ன?

பிரிட்டன் செல்வதற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்ற விதியை பிரிட்டன் தளர்த்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜனவரி 2022, 7:18 am

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் சுகாதார கட்டமைப்பின் மீதும் பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. குறிப்பாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கையை குறைக்க பரிசோதனை விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், பிரிட்டன் செல்வதற்கு முன்பு கரோனா பரிசோதனை எடுக்க வேண்டும். ஆனால், புதிய வழிகாட்டுதல்களின்படி, வெள்ளிக்கிழமை முதல் இந்த விதி நீக்கப்படுகிறது. அதேபோல், ரேபிட் கருவி மூலம் சோதனை செய்து, அதில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவரும் பட்சத்தில், பிசிஆர் சோதனை செய்து கொள்வது கட்டாயமாக இருந்தது. 

இந்த விதியும் ஜனவரி 11ஆம் தேதி முதல், திரும்பப்பெறப்படவுள்ளது. இதுகுறித்து பிரிட்டன் கீழ் சபையில் போரிஸ் ஜான்சன் பேசுகையில், "ஒமைக்ரான் ஏற்படுத்தியுள்ள அலை காரணமாக, கரோனா பரிசோதனை வசதிகள், தேவைப்படுவோருக்கு சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதுவரை இல்லாத அளவுக்கு, கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மருத்துவமனையில் சேர்வோரின் எண்ணிக்கையும் திடீரென அதிகரித்துள்ளது. ஒன்பது நாள்களில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது" என்றார்.

பிரிட்டனில் புதன்கிழமை மட்டும் 1,94,747 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், கடுமையான விதிகளை அமல்படுத்தாமல் ஒமைக்ரானை எதிர்கொள்வதில் ஜான்சன் உறுதியாகவுள்ளார். மருத்துவமனைகள் கடும் அழுத்தத்தை சந்தித்துள்ள நிலையில், தேசிய சுகாதார சேவை நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இருப்பினும், கடும் விதிகள் அல்லாத 'பிளான் பி' திட்டத்தை அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.