இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் பிறந்தநாளையொட்டி பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் ஒரு இயற்பியலாளர். இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் 1942, ஜன. 8ல் பிறந்தார். அண்டவெளியின் தோற்றத்தையும், அதன் பரிணாம வளர்ச்சியையும் பற்றி ஆராய்ந்து மகத்தான கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர்.
அண்டவியல் (cosmology), குவாண்டம் ஈர்ப்பு(quantum gravity), கருங்குழி (black holes) வெப்ப இயக்கவியல் குறித்த இவரது ஆய்வுக் கட்டுரைகள் அறிவியலுக்கு முக்கியப் பங்களிப்பு.
ஸ்டீபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணிதவியலில் லூக்காசியன் பேராசிரியராக பணிபுரிந்தார். அந்த பல்கலைக்கழகத்தில் 1979-இல் பணிக்கு சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங், அங்கு சுமார் 30 ஆண்டுக்காலம் பணியாற்றினார். பின்னர் தனது 67-ஆம் வயதில், 2009-இல் பணி மூப்பு பெற்றார்.
21 வயதிலேயே அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis,) என்னும் குணப்படுத்த முடியாத நரம்பு நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சற்ற நிலையிலும் தொழில்நுட்ப உதவியுடன் தன்னுடைய பணிகளைச் செய்து வந்தார்.
இதையும் படிக்க | படிக்காத மாணவர் விஞ்ஞானியானார்!
அறிவியல் துறையில் குறிப்பாக இயற்பியலில் அளப்பரிய சாதனைகளை படைத்த ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் 2018 மார்ச் 14 ஆம் தேதி மறைந்தார்.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் 84 ஆவது பிறந்தநாள் இன்று. அவரை நினைவுகூறும் பொருட்டு, சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.
இதையும் படிக்க | "வெற்றிக்கான வழி இருக்கவே செய்கிறது!'' ஸ்டீபன் ஹாக்கிங்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.