6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மெக்ஸிகோ: கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சமாக உயர்வு

கரோனாவால் மெக்ஸிகோவில் கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 3 லட்சம் பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
மெக்ஸிகோ: கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சமாக உயர்வு
Updated On :11 ஜனவரி 2022, 12:35 pm

DIN

கரோனாவால் மெக்ஸிகோவில் கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 3 லட்சம் பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உலகளவில் கரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தொற்று பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. கட்டுப்பாடு நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டுவரும் சூழலில் மெக்ஸிகோவில் தொற்றின் தீவிரத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால், மெக்ஸிகோவில் கடந்த 2020-லிருந்து  தற்போது வரை 3 லட்சம் பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். நேற்று(ஜன.10) கரோனா தொற்றின் காரணமாக 108 பேர் பலியானதைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 3,00,334 ஆக உயர்ந்தது.

மேலும், இதுவரை மெக்ஸிகோவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 41.3 லட்சமாக பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.