சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஆஸ்திரேலியா: புதிய உச்சம் கண்ட தினசரி கரோனா பலி

ஆஸ்திரேலியாவில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது.

News image
Updated On :18 ஜனவரி 2022, 7:22 pm

DIN

ஆஸ்திரேலியாவில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 74 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பலி எண்ணிக்கையாகும். இத்துடன், இதற்கு முன்னா் கடந்த ஆண்டு செப்டம்பா் 4-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட 59 உயிரிழப்புகளே அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 73,580 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இத்துடன், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,76,035ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 12,09,514 தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.