கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா ஒருநாள் பாதிப்பு

பாகிஸ்தானில் 2020 முதல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஒருநாள் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:11 am

DIN

பாகிஸ்தானில் 2020 முதல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஒருநாள் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.  

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,678 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிலிருந்து இதுவே மிக அதிக பாதிப்பு என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

முன்னதாக கடந்த ஜூன் 13, 2020 அன்று ஒருநாள் பாதிப்பு 6,825 ஆக இருந்ததாகக் கூறியுள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில்23 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 29,065 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று 814 பேர் உள்பட இதுவரை 12,66,479 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 57,935 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு அதிகரித்தாலும் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.