உலகளவில் 975 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
உலகம் முழுக்க இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34.04 கோடியாக உயர்ந்திருக்கிற நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தீவிரவமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.


உலகம் முழுவதும் 975 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34.04 கோடியாக உயர்ந்திருக்கிற நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தீவிரவமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், ஒமைக்ரான் அச்சுறுத்துதல் காரணமாக வேகமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக , ஒமைக்ரான் தொற்றால் அண்டை நாடுகள் தடுப்பூசிகளை தொடர்ந்து செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ,காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 975 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாவும் அதில் 398 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்கள் என்றும் தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிக்க | தமிழக சுகாதாரத்துறையில் கிராம செவிலியர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
தற்போது உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 6.91 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 8.60 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.82 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.82 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.
மேலும், உலகம் முழுவதும் 53 சதவீத மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...