பாகிஸ்தானில் 2-வது நாளாக 7,000-க்கும் அதிகமான கரோனா பாதிப்பு!
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 7,195 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 7,195 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக எதிர்பாராத வகையில் அதிகரித்து வருகிறது. கரோனா தொடங்கிய காலம் முதல் இதுவரை இல்லாத அளவுக்கு நாள் ஒன்றுக்கு 7 ஆயிரத்துக்கும் அதிகமாக பாதிப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,195 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 8 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 29,105 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 833 பேர் உள்பட இதுவரை 1,269,078 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 76,617 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு அதிகரித்தாலும் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...