/

அண்டைநாட்டில் கோரத்தாண்டவமாடும் கரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை பதிவான நிலையில் 45 நாள்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது.

News image

அண்டைநாட்டில் கோரத்தாண்டவமாடும் கரோனா பாதிப்பு

Updated On :31 ஜனவரி 2022, 12:55 pm

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை பதிவான நிலையில் 45 நாள்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது.

அதேவேளையில், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது: 
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,978 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இத்துடன், 14,02,070 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். துதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 29 கேரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். அங்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோரின் விகிதம் 10 சதவீதமாக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் சுமார் 136 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 700 ஆக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அது 1,640 ஆக அதிகரித்துள்ளது.

அந்நாட்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பாகிஸ்தான் தற்போது ஐந்தாவது கரோனா அலையை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு கரோனா பாதிப்பும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் விகிதமும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.