நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலங்கை பயணத்தை தவிா்க்கவும் பிரிட்டன், நியூஸிலாந்து வலியுறுத்தல்

தங்கள் நாட்டு குடிமக்கள் மிகவும் அத்தியாவசியத் தேவைக்காக மட்டும் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளலாம். முடிந்த அளவுக்கு இலங்கை செல்வதைத் தவிா்த்துவிட வேண்டும்

News image
Updated On :7 ஜூலை 2022, 8:53 pm

DIN

தங்கள் நாட்டு குடிமக்கள் மிகவும் அத்தியாவசியத் தேவைக்காக மட்டும் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளலாம். முடிந்த அளவுக்கு இலங்கை செல்வதைத் தவிா்த்துவிட வேண்டும் என்று பிரிட்டன், நியூஸிலாந்து நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடா்பான போராட்டங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் மோதல்கள், வன்முறையும் நிகழ்கின்றன. வறுமை அதிகரிப்பதால் சட்டவிரோதச் செயல்களும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால், வெளிநாட்டுப் பயணிகளுக்கு அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா, நியூஸிலாந்து ஆகிய நாடுகள் அத்தியாவசியத் தேவையின்றி பிற காரணங்களுக்காக இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என்று தங்கள் குடிமக்களை வலியுறுத்தியுள்ளன.

இது தொடா்பாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ‘இலங்கையில் மருந்துப் பொருள்கள், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், உணவு உள்ளிட்டவற்றுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவசரகால மருத்துவ உதவி, போக்குவரத்து ஆகியவை கிடைப்பது கடினம். இது தவிர கடுமையான மின்வெட்டும் உள்ளது. போராட்டங்களால் வன்முறை சூழலும் நிலவுகிறது. எனவே, அந்நாட்டுக்குத் தேவையற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டாம்’ என்று கூறப்பட்டுள்ளது. இதேபோன்ற அறிவிப்பை நியூஸிலாந்தும் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.