ஜெனீவா: ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய வகை கரோனா BA.2.75 இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
கரோனாவால், கடந்த இரண்டு வாரங்களில் உலகளவில் பதிவான வழக்குகள் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது கெப்ரேயஸ் கூறினார்.
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், BA.4 மற்றும் BA.5 புதிய அலைகள் எழுந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் BA.2.75 இன் புதிய துணை வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாம் இன்னும் தொற்றுநோய்க்கு மத்தியில் இருக்கிறோம். நோய்க்கிருமிக்கு நிறைய சக்தி உள்ளது. எனவே BA.4 அல்லது BA.5 அல்லது BA.2.75 ஆக இருந்தாலும் நோய்க்கிருமி தொற்று தொடரும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று கெப்ரேயஸ் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துரித வேகத்தில் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எனக்கு புதிய அடையாளமாக இருக்கும்: நடிகர் சூர்யா

எபோலா அச்சம்: மருத்துவமனையைத் தவிர்க்கும் கர்ப்பிணிகள்... காங்கோவில் இரட்டிப்பான உயிரிழப்பு!

நீர்வரத்து இல்லாததால் மேட்டூர் காவிரியாற்றங்கரை பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து வெறிச்சோடியது!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



