நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஷின்சோ அபேவின் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது: ராகுல் காந்தி

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இழப்பு மிகுந்த வேதனையளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 ஜூலை 2022, 10:08 am

DIN

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இழப்பு மிகுந்த வேதனையளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேற்கு ஜப்பானின் நாரா பகுதியில் இன்று (ஜூலை 8) முன்னாள் பிரதமர் பேசிக்கொண்டிருக்கையில் மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டார். அபே பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவர் பின் பகுதியிலிருந்து சுடப்பட்டார்.

பின்னர், சம்பவ இடத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

67 வயதான அபே ஜப்பான் நாட்டின் நீண்ட நாட்கள் பிரதமராக இருந்தவர். உடல் நலத்தினைக் கருத்தில் கொண்டு கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். 

துப்பாக்கியால் சுட்ட நபரை காவல் துறையினர் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஜப்பானில் நடந்த இந்த அசம்பாவிதம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரின் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். அபே பிரதமராக இருந்த போது இந்தியா மற்றும் ஜப்பான் இரு நாட்டின் உறவுகளும் சிறப்பாக இருந்ததாக அவர் தெரிவித்தார். 

அபேவை இழந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு தனது ட்விட்டர் பதிவின் மூலம், தனது ஆழ்ந்த இரங்கல்களை ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.