வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இலங்கையில் 2 அமைச்சர்கள் ராஜிநாமா

இலங்கையில் இரண்டு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

News image
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்
Updated On :9 ஜூலை 2022, 7:34 pm

DIN

இலங்கையில் இரண்டு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

இலங்கையில் நிலவி வந்த கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தொடரும் பொருளாதார சிக்கல் காரணமாக கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் மக்கள் தங்களது அத்தியாவசிய சேவையை பெறுவதற்கு கூட மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இன்று பிற்பகலில் அதிபர் கோத்தபய ராஜபட்ச வீட்டிற்கும், மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

இதையடுத்து, கொழும்பில் சனிக்கிழமை மாலை அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தை அவைத் தலைவா் கூட்டினாா். அதில் பங்கேற்ற எம்.பி.க்கள், அதிபா் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினா்.

அவையின் கோரிக்கையை ஏற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராஜிநாமா செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதிபர் கோத்தபயவும் அடுத்த வாரத்தில் ராஜிநாமா செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ரணில் அரசில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட ஹரிம் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.