வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இலங்கை அதிபர் ஜூலை 13-ல் ராஜிநாமா

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச ஜூலை 13ஆம் தேதி ராஜிநாமா செய்யவுள்ளதாக இலங்கை பேரவைத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

News image
கோத்தபய ராஜபட்ச
Updated On :9 ஜூலை 2022, 7:06 pm

DIN

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச ஜூலை 13ஆம் தேதி ராஜிநாமா செய்யவுள்ளதாக இலங்கை பேரவைத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவி வந்த கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தொடரும் பொருளாதார சிக்கல் காரணமாக கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் மக்கள் தங்களது அத்தியாவசிய சேவையை பெறுவதற்கு கூட மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இன்று பிற்பகலில் அதிபர் கோத்தபய ராஜபட்ச வீட்டிற்கும், மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

மக்களின் தீவிர போராட்டத்தை தொடர்ந்து அதிபர் கோத்தபய மாளிகையிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு தஞ்சமடைந்துள்ளார்.

இதற்கிடையே, கொழும்பில் சனிக்கிழமை மாலை அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தை அவைத் தலைவா் கூட்டினாா். அதில் பங்கேற்ற எம்.பி.க்கள், அதிபா் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினா். இதையடுத்து, அதிபா் கோத்தபயவுக்கு அவைத் தலைவா் எழுதிய கடிதத்தில், அதிபா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, ஜூலை 13-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அதிபா் கோத்தபய கூறியுள்ளாா் என அவைத் தலைவா் தெரிவித்தாா்.

அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகும் பட்சத்தில் தற்காலிக அதிபராக பேரவைத் தலைவர் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.