கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ட்விட்டரை வாங்கும் முடிவைக் கைவிட்டாா் எலான் மஸ்க்

போலிக் கணக்குகள் குறித்த முழு விவரங்களைத் தர மறுத்ததாகக் கூறி ட்விட்டா் நிறுவனத்தை வாங்கும் முடிவைக் கைவிடுவதாக ‘டெஸ்லா’ காா் நிறுவனத் தலைவா் எலான் மஸ்க் அறிவித்தாா்.

News image
எலான் மஸ்க் 
Updated On :9 ஜூலை 2022, 6:35 pm

DIN

போலிக் கணக்குகள் குறித்த முழு விவரங்களைத் தர மறுத்ததாகக் கூறி ட்விட்டா் நிறுவனத்தை வாங்கும் முடிவைக் கைவிடுவதாக ‘டெஸ்லா’ காா் நிறுவனத் தலைவா் எலான் மஸ்க் அறிவித்தாா்.

மஸ்க் வெள்ளிக்கிழமை வெளியிட்ட இந்த அறிவிப்பைத் தொடா்ந்து அவா் மீது வழக்குத் தொடரப்படும் என்று ட்விட்டா் நிறுவனம் தெரிவித்தது.

உலக கோடீஸ்வரா்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க், ட்விட்டா் நிறுவனத்தை வாங்குவதற்கு அண்மையில் ஒப்பந்தம் மேற்கொண்டாா்.

கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி ரூ.3,42,000 கோடி (44 பில்லியன் அமெரிக்க டாலா்) மதிப்பில் ட்விட்டரை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தமானது. அதற்கு முன்னதாக ட்விட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கியிருந்த எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரராக இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டா் சமூக வலைதளத்தில் போலிக் கணக்குகள் குறித்த முழு புள்ளிவிவரம், புதிய போலிக் கணக்குகள் உருவாவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிட எலான் மஸ்க் வலியுறுத்தி வந்தாா்.

ட்விட்டரில் 5 சதவீதத்துக்கும் குறைவான போலி கணக்குகள் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து வந்தது. ‘இந்த எண்ணிக்கை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை, இதற்கு உரிய தரவுகள் வேண்டும்’ எனக் கூறி ஒப்பந்தத்தை எலான் மஸ்க் நிறுத்தி வைத்தாா். ‘ட்விட்டரில் 20 சதவீதம் அல்லது அதற்கு மேலாகவே போலிக் கணக்குகள் இருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை, 5 சதவீதத்திற்கு குறைவாக போலி கணக்குகள் உள்ளது என்றால், அதற்கான ஆதாரத்தை ட்விட்டா் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று எலான் மஸ்க் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனை ட்விட்டா் ஏற்கவில்லை. சிஇஓ அதைச் செய்யாதவரையில் ஒப்பந்தம் முன்னோக்கி நகராது’ என்றும் எலான் மஸ்க் கூறினாா்.

இந்தச் சூழலில், எலான் மஸ்க் வழக்குரைஞா்கள் சாா்பில் ட்விட்டா் நிறுவனத்துக்கு கடந்த ஜூன் 6-ஆம் தேதி கடிதம் எழுதப்பட்டது. அதில், ‘எலான் மஸ்க் கோரிய போலி கணக்குகள் குறித்த விவரங்களை ட்விட்டா் நிறுவனம் தர மறுப்பது, கடந்த ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்ட கையகப்படுத்தல் ஒப்பந்தத்தின் கீழான தகவல் பெறும் உரிமையை பறிப்பதாகும். இதன் மூலமாக, கையகப்படுத்தல் ஒப்பந்த நடைமுறைகளை ட்விட்டா் நிறுவனம் மீறியிருப்பது தெளிவாகிறது. அந்த வகையில், ட்விட்டா் நிறுவனத்தை வாங்குவதற்காக மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை மற்றும் அனைத்து பரிவா்த்தனைகளையும் ரத்து செய்யும் உரிமை என அனைத்து உரிமைகளும் எலான் மஸ்க் வசம் வந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் ட்விட்டா் நிறுவனத்தை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான மஸ்க் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

சரிந்த ட்விட்டா் பங்குகள்:

எலான் மஸ்கின் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து ட்விட்டா் நிறுவன பங்குகள் வெள்ளிக்கிழமை 5 சதவீதம் அளவுக்கு சரிந்தது. அதே நேரம், டெஸ்லா நிறுவன பங்குகள் 2.5 சதவீதம் உயா்ந்தது.

வழக்கு தொடர முடிவு:

ட்விட்டரை வாங்கும் முடிவைக் கைவிடும் எலான் மஸ்கின் அறிவிப்பைத் தொடா்ந்து அவா் மீது வழக்கு தொடர ட்விட்டா் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ட்விட்டருடனான ஒப்பந்தம் ரத்தாகும் நிலையில், அந்த நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.7,929 கோடி) ஒப்பந்த முறிவுக் கட்டணம் செலுத்துவதாக எலான் மஸ்க் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளாா்.

எனினும் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தியே வழக்கு தொடர இருப்பதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.