ட்விட்டரை வாங்குவதில் இருந்து பின்வாங்கிய எலான் மஸ்க்!
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கியுள்ளத்தையடுத்து, அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கியுள்ளத்தையடுத்து, அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கோடீஸ்வரரும் டெல்ஸா அமைப்பின் தலைமை செயலதிகாரியுமான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி, 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.44 லட்சம் கோடி) கையகப்படுத்துவதற்கு அந்த ஊடக நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் திடீரென அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார். முன்னதாக, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, ட்விட்டா் பணியாளா்களுடன் காணொலி மூலம் கடந்த வாரம் பேசிய எலான் மஸ்க், ட்விட்டரைக் கையகப்படுத்துவதற்குத் தடையாக பல பிரச்னைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தற்போது அவர் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஒப்பந்தத்தின்படி அவர் நிறுவனத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று ட்விட்டரின் வாரியத் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...