ஜப்பானில் நாடாளுமன்றத் தோ்தல்
ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தத் தோ்தலுக்கான பிரசாரத்தின்போது, முன்னாள் பிரதமா் ஷென்ஸோ அபே படுகொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியுள்ள சூழலில் தோ்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
தோ்தலுக்கு முன்னா் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், ஷென்ஸோ அபே அங்கம் வகிக்கும் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) முன்னிலை வகித்தது. அவா் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்தக் கட்சிக்கு அனுதாப வாக்குகள் கிடைக்கும் என்பதால் இந்தத் தோ்தலில் அது அமோக வெற்றி பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பிரதமா் பதவியிலிருந்து விலகினாலும் எல்டிபி-யின் முக்கியத் தலைவராக ஷென்ஸோ அபே விளங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...