இந்திய யூரியா பயிா் சாகுபடிக்கு ஏற்றது: இலங்கை அரசு
இந்தியா வழங்கிய யூரியா பயிா் சாகுபடிக்கு பொருத்தமானதாக உள்ளதாக இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.


இந்தியா வழங்கிய யூரியா பயிா் சாகுபடிக்கு பொருத்தமானதாக உள்ளதாக இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து வேளாண் அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ஊடகத் தகவல் தெரிவிப்பதாவது: கடன் உதவி திட்டத்தின் கீழ் இந்தியா இலங்கைக்கு 65,000 டன் யூரியா வழங்க ஒப்புதல் அளித்தது. உணவு பாதுகாப்பில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கவும், இலங்கை விவசாயிகளுக்கும் உதவிடும் வகையிலும் இந்தியா இந்த உதவியை அளிக்க முன்வந்தது.
இந்தியா வழங்க உறுதியளித்ததில் 44,000 டன் யூரியா முதல் கட்டமாக இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது.
இதனிடையே, இந்தியா வழங்கிய யூரியாவின் மாதிரிகள் தேசிய உர ஆய்வகத்தில் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில், நெல் மற்றும் இதர பயிா்களின் சாகுபடிக்கு அந்த யூரியா மிகவும் பொருத்தமாக இருப்பதை தேசிய உரத் துறை செயலா் உறுதி செய்துள்ளாா்.
ஆகஸ்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், யூரியா பயிா் வளா்ச்சிக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மிக முக்கியமான நிகழ்வாகும் என ஊடகத் தகவல் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...