இலங்கை பிரதமர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையாக பொருளாதார நெருக்கடியால் உருவான மக்கள் புரட்சி காரணமாக அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக உறுதியளித்த கோத்தபய ராஜபட்ச, ராஜிநாமா செய்வதற்கு முன்னதாகவே இலங்கை ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.
இதையும் படிக்க: ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றார் கோத்தபய!
இதனால், நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து தற்போது போராட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பாதுகாப்பிற்காக காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










