அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கிரீன்வுட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலில் பொதுமக்களில் 3 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரும் உயிரிழந்துள்ளார்.
மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து, துப்பாக்கி வைத்திருந்த பொதுமக்களில் ஒருவர், மர்ம நபரை சுட்டுள்ளார். இதனால் பலி 4 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு தடை செய்ய வேண்டும் அல்லது அவற்றை வாங்கும் வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.