இங்கிலாந்தில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரிப்பு

இங்கிலாந்தில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரிப்பு

இங்கிலாந்தில் பணவீக்கத்தின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Published on

இங்கிலாந்தில் பணவீக்கத்தின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இங்கிலாந்தில் நுகா்வோா் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் மே மாதத்தில் 9.1 சதவீதத்திலிருந்து ஜூன் மாதம் 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என தேசிய புள்ளியியல் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத புதிய பணவீக்க உயர்வு எனவும் தெரிவித்துள்ளனர்.

வாகன எரிவாயு, உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் இந்த சில்லறைப் பணவீக்கத்தின் விகிதம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மேலும், உக்ரைனில் நடைபெறும் போராலும், கரோனா கட்டுப்பாடுகளாலும் பல நாடுகளிலும் பணவீக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com