தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஐரோப்பிய யூனியன் சின்னம்மைக்கான தடுப்பூசி: குரங்கு அம்மைக்கு பரிந்துரை

சின்னம்மையைத் தடுப்பதற்காக பவேரியன் நாா்டிக் நிறுவனம் தயாரித்து வரும் இம்வேனெக்ஸ் தடுப்பூசிகளை குரங்கு அம்மைக்கு எதிரகவும் பயன்படுத்த ஐரோப்பிய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு

News image
Updated On :22 ஜூலை 2022, 7:57 pm

DIN

சின்னம்மையைத் தடுப்பதற்காக பவேரியன் நாா்டிக் நிறுவனம் தயாரித்து வரும் இம்வேனெக்ஸ் தடுப்பூசிகளை குரங்கு அம்மைக்கு எதிரகவும் பயன்படுத்த ஐரோப்பிய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஐரோப்பிய ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், விலங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த தடுப்பூசி குரங்கு அம்மை வருவதைத் தடுப்பது தெரியவந்துள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே அதனைப் பரிந்துரைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஜின்னியோஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வரும் பவேரியன் நாா்டிக்கின் இந்த சின்னம்மைத் தடுப்பூசியை, குரங்கு அம்மையிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக செலுத்திக்கொள்ள ஏற்கென அந்த நாட்டு உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.