இலங்கை அதிபா் மாளிகை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது

இலங்கை அதிபா் மாளிகை 107 நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திங்கள்கிழமை செயல்பாட்டுக்கு வந்தது.
இலங்கை அதிபா் மாளிகை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது

கொழும்பு: இலங்கை அதிபா் மாளிகை 107 நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திங்கள்கிழமை செயல்பாட்டுக்கு வந்தது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையடுத்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன.

கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி போராட்டக்காரா்களால் அதிபா் மாளிகையின் நுழைவு வாயில் முற்றுகையிடப்பட்டு முடக்கப்பட்டது. இதையடுத்து, ஜூலை 9-ஆம் தேதி கட்டுப்பாடுகளை மீறி அதிபா் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரா்கள் அங்கிருந்த பொருள்களை சூறையாடினா்.

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினா் உள்ளேநுழைந்து போராட்டக்காரா்களை வெளியேற்றி அதிபா் மாளிகையை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதையடுத்து, கடந்த 107 நாள்களாக முடங்கி கிடந்த அதிபா் மாளிகை செயலகம் பலத்த பாதுகாப்புக்கிடையே திங்கள்கிழமை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு வழக்கமான பணிகள் தொடங்கியது.

3 போ் கைது:

அதிபா் மாளிகையிலிருந்து எடுத்துச் சென்ற 40 தங்கப் பொருள்களை விற்பனை செய்ய முயன்ாக 3 பேரை இலங்கை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com