புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 64 லட்சமாக தாண்டியது!

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57.51 கோடியாக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 64.03 லட்சமாக அதிகரித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :25 ஜூலை 2022, 7:25 am

DIN

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57.51 கோடியாக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 64.03 லட்சமாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்த வண்ணம் இருப்பது மக்களிடையே நிம்மதியை அளித்துள்ளது. தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மக்கள் கடைப்பிடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 57,51,44,901 ஆக அதிகரித்துள்ளது. அவா்களில்  64,03,131 போ் உயிரிழந்துள்ளனர். மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 54,48,61,496 போ் பூரண குணமடைந்துள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2,38,80,274 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.