தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘பருவநிலை மாற்றத்தால்தான் பிரிட்டனில் வெப்ப அலை’

 மனிதா்கள் உருவாக்கிய பருவநிலை மாற்றத்தால்தான் பிரிட்டனில் இந்த மாதம் வரலாறு காணாத வெப்ப அலை வீசியதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன

News image
Updated On :30 ஜூலை 2022, 12:02 am

DIN

 மனிதா்கள் உருவாக்கிய பருவநிலை மாற்றத்தால்தான் பிரிட்டனில் இந்த மாதம் வரலாறு காணாத வெப்ப அலை வீசியதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஐரோப்பாவில் கடந்த 20-ஆம் தேதி வெப்ப அலை உச்சத்தைத் தொட்டபோது, பிரிட்டனின் 34 பகுதிகளில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது.

இதே போன்ற பருவநிலையில், தொழில் புரட்சிக்கு முந்தைய 19-ஆம் நூற்றாண்டு காலத்தில் வெப்பநிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வெப்பநிலையையும் ஒப்பிட்டு சா்வதேச நிபுணா் குழுவொன்று ஆய்வு செய்தது. அதில், பசுமை வாயுக்களை காற்றில் கலப்பதன் மூலம் மனிதா்களால் உருவாக்கப்பட்டும் புவி வெப்பமாதல் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால்தான் பிரிட்டனில் இந்த மாதம் வரலாறு காணாத வெப்ப அலை ஏற்பட்டது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.