பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 22 பேர் பலி
பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 22 பேர் பலியாகினர்.


பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 22 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த கில்லா சைஃபுல்லா பகுதியில் இன்று காலை 100 அடி பள்ளத்தாக்கில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 22 பேர் பலியாகினர். ஒரு சிறுவன் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளான்.
விபத்து நிகழ்ந்த பகுதிக்கு விரைந்த காவல்துறை மற்றும் மீட்புப் படையினர் பேருந்தில் சிக்கி பலியானவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து விபத்திற்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...