இலங்கை மின்சார வாரியத் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே தொடர் அரசியல் குழப்பங்களும் நீடித்து வருகின்றன.
அந்த வகையில் இலங்கையில் மன்னார் பகுதியில் இரண்டு காற்றாலை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான திட்டமிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. காற்றாலை அமைக்கும் டெண்டரை அதானி குழுமத்திற்குத் தர, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்பேரில் அதிபர் கோத்தபய ராஜபட்ச மூலமாக தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக மின்சார வாரியத் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ சமீபத்தில் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
அதன்பின்னர் மன உளைச்சல் காரணமாக, தான் இவ்வாறு தெரிவித்து விட்டதாகவும் தான் கூறியதற்கு மன்னிப்பு கோருவதாகவும் பெர்டினாண்டோ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மின்சார வாரியத் தலைவர் பதவியை பெர்டினாண்டோ இன்று ராஜிநாமா செய்துள்ளார்.
அவரது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாகவும் மின்சார வாரியத்தின் புதிய தலைவராக நளிந்த இளங்கோகோன் நியமிக்கப்பட உள்ளதாகவும் மின்சார வாரியத்துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்திற்குத் திட்டத்தைத் தர அழுத்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாக பெர்டினாண்டோ ராஜிநாமா செய்திருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வனத் துறை சாா்பில் 2 ஒப்பந்தங்கள் கையொப்பம்

தொகுதி மறுவரையறைக்கு முன்பே மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கம்? - மத்திய அரசு பரிசீலனை

காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
ரூ.228 கோடி வங்கி மோசடி வழக்கு: அனில் அம்பானி மகனிடம் ஆறரை மணி நேரம் சிபிஐ விசாரணை
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

