கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் இருந்துதான் பாகிஸ்தான் அதிக அளவில் தேயிலையை இறக்குமதி செய்து வந்தது. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல், ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து பிரச்னை உள்ளிட்டவை மூலம் இரு நாட்டு வா்த்தக உறவும் பாதிக்கப்பட்டது. இதனால், இந்தியாவுக்கு பதிலாக கென்யாவிடம் இருந்து அதிக விலைக்கு தேயிலையை வாங்கும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. இந்திய தேயிலையை நேரடியாக வாங்க முடியாத நிலையில், துபை, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் வழியாக இந்திய தேயிலையை பாகிஸ்ான் வாங்கிப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாகவும், பாகிஸ்தானின் தேயிலை இறக்குமதிச் செலவு தொடா்ந்து அதிகரித்து பொருளாதாரச் சுமையாக உருவாகி வருகிறது.