சிரியாவில் பேருந்து மீது திங்கள்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 13 போ் பலியாகினா்.
இதுகுறித்து சிரியா அரசு செய்தி நிறுவனமான ‘சனா’ தெரிவித்திருப்பதாவது:
வடக்கு சிரியாவில் ரக்கா மாகாணத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய மாகாணத்தில் உள்ள ஹோம்ஸ் என்ற பகுதிக்கு அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 ராணுவ வீரா்களும், பொதுமக்கள் இருவரும் உயிரிழந்தனா். ராணுவ வீரா்கள் மூவா் காயமடைந்தனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இதன் பின்னணியில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சம்பவம் நடைபெற்ற பகுதி முன்னா் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. சிரியாவில் ஐ.எஸ். அமைப்பு பலவீனமடைந்து விட்டாலும், கிழக்கு, வடக்கு, மத்திய சிரியாவில் அந்த அமைப்பு இதுபோன்ற தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

