வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54.57 கோடியாக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 63.43 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்த வண்ணம் இருப்பது மக்களிடையே நிம்மதியை அளித்துள்ளது. தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மக்கள் கடைப்பிடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: திரௌபதி முர்முவுக்கு ’இஸட்’ பிரிவு பாதுகாப்பு
எனினும், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 54,57,11,054 ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 63,43,454 போ் உயிரிழந்துள்ளனர். மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 52,07,13,764 போ் பூரண குணமடைந்துள்ளனர். தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,86,53,836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.