சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீண்டும் திறப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் கடந்த ஆண்டு மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:07 pm

DIN

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் கடந்த ஆண்டு மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதால், காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் தில்லி திரும்பினா். அங்கு ஏறத்தாழ 11 மாத காலம் இந்திய தூதரகம் செயல்படாத நிலையில், தற்போது இந்திய தொழில்நுட்பக் குழுவினா் காபூல் சென்றுள்ளனா். இதன்மூலம் அங்கு இந்திய தூதரம் வியாழக்கிழமை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவிகள் திறம்பட சென்றடைவதை கண்காணிக்கவும், அவற்றை ஒருங்கிணைக்கவும் இந்திய தொழில்நுட்பக் குழு காபூல் சென்றடைந்தது. அண்மையில் மற்றொரு குழு ஆப்கானிஸ்தான் சென்று தலிபான் மூத்த தலைவா்களை சந்தித்தது. ஆப்கானிஸ்தான் உடனான நமது நீண்ட நெடிய உறவும், மனிதாபிமான உதவிகளும் தொடரும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.