ரஷியாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகள் உக்ரைனில் தாக்குதல்
ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்குள் நுழைந்து பெலாரஸ் படைகள் தாக்குவதாக உக்ரைன் நாடாளுமன்ற அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.


ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்குள் நுழைந்து பெலாரஸ் படைகள் தாக்குவதாக உக்ரைன் நாடாளுமன்ற அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன.
ஏற்கெனவே தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய ராணுவத்தினர் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மீதும் ரஷியப் போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருகின்றனர்.
இதையும் படிக்க | உக்ரைன் போர்: ரஷியத் தாக்குதலில் இந்திய மாணவர் பலி
இந்நிலையில், ரஷியாவுக்கு ஆதரவாக பெலாரஸ் நாட்டின் படைகள் உக்ரைனின் வடக்குப் பகுதி வழியாக நுழைந்து தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...