உக்ரைன் போர்: கார்கிவ்வில் ரஷியா பயங்கரத் தாக்குதல்
உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கார்கிவ்வில் ரஷியப் படை பயங்கரத் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கார்கிவ்வில் ரஷியப் படை பயங்கரத் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் 7-வது நாளாக ரஷிய ராணுவப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்திய ரஷிய ராணுவம் சில இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த பிப். 24ஆம் தேதி முதல் ரஷிய ராணுவம் உக்ரைனின் பல்வேறு எல்லைப் பகுதிகள் வழியாக ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கார்கிவ்வில் ரஷியப் படைகள் குண்டு வீச்சுகள் மூலம் பயங்கரத் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதியை முழுமையாகக் கைப்பற்ற ரஷிய ராணுவத்தினர் முயன்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கெர்சன் நகரை முழுமையாகக் கைப்பற்றியதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது.
முன்னதாக, இந்திய மாணவர் ஒருவர் நேற்று(மார்.1) கார்கிவ் பகுதியில் குண்டு வீச்சில் பலியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...