அணுமின் நிலையத்தில் தீ; அதிகமானோர் படுகாயம்: உக்ரைன்

உக்ரைனினுள்ள அணுமின் நிலையத்தை சுற்றிவளைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியதால், அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..
Updated on
1 min read

கீவ்: உக்ரைனினுள்ள அணுமின் நிலையத்தை சுற்றிவளைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியதால், அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணுமின் நிலையத்தின் சில இடங்களில் பயங்கர வெடி விபத்துகள் நேரிட்டதாகவும், அதில், ஏராளமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும், அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செயல் முடியாத நிலையில் இருப்பதாகவும் சபரோஸ்ஸியா அணு உலை அமைந்திருக்கும் இடத்திலிருந்து 120 கி.மீ. தொலைவில் இருக்கும் எனெர்கோடர் நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், அணு உலையில் நேரிட்ட தீயால் படுகாயமடைந்தவர்களின் சரியாக எண்ணிக்கை எவ்வளவ என்று மேயர் தெரிவிக்கவில்லை.

இது குறித்து, உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா நேற்று தெரிவிக்கையில், ரஷிய ராணுவத்தினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்துவதால், அணுமின் நிலையம் தீப்பிடித்து எரிந்து வருவதாகவும், இதனை உடனடியாக அணைக்காவிட்டால், செர்னோபில் உலையை விட 10 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்திருந்தார்.

நேட்டோ கூட்டமைப்பில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது கடந்த 24ஆம் தேதி முதல் ரஷிய ராணுவப்படை தாக்குதல் நடத்தி வருகிறது.  அனைத்து திசைகளிலும் ரஷிய ராணுவம் முன்னேறி வருவதோடு, நாட்டின் தலைநகரான கீவ், மிகப்பெரிய நகரான கார்கீவ், கெர்சன், செர்னோபில் போன்ற முக்கிய நகரங்களை ரஷியா முழுமையாக கைப்பற்றியது.

ரஷியாவின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை  15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் ரஷிய ராணுவம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சபரோஸ்ஸியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அணுமின் நிலையத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்துவருகிறது. இதனை உக்ரைன் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்  டிமிட்ரோ குலேபா உறுதிப்படுத்தியிருந்தார்.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, சபரோஸ்ஸியா அணுமின் நிலையத்தின் மீது ரஷிய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே உலையில் ஒருபகுதியில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதில் விபத்து நேரிட்டால் செர்னோபில் உலையை விட 10 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ரஷியப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும். தீயணைப்புப் படையினருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அணுமின் நிலையத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com