தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மரியுபோல் நகரில் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

ரஷியா நடத்திய தாக்குதலில் மரியுபோல் நகரில் இதுவரை பொதுமக்கள் 1,500-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
Updated On :12 மார்ச் 2022, 6:22 am

DIN

ரஷியா நடத்திய தாக்குதலில் மரியுபோல் நகரில் இதுவரை பொதுமக்கள் 1,500-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக மேலும் தெரிவித்ததாவது. 

உக்ரைன் மீது ரஷியா 17-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. 

அதேவேளை, தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில் மரியுபோலில் சிக்கித் தவிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சி தோல்வி அடைந்திருந்தாலும், மக்களை வெளியேற்ற அதிகாரிகள் மீண்டும் முயற்சித்து வருகின்றனர். என்று உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சு கூறினார். 

மரியுபோலில் சுமார் 3,00,000 மக்கள் தண்ணீர், குளிர் மற்றும் பசியால் அவதிப்படுகின்றனர். நகரத்துக்குள் நுழையத்  தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மரியுபோலில் இருந்து ஓரிகிவ் மற்றும் போலோஹி வழியாக ஜபோரிஜ்ஜியா வரை ஒரே ஒரு சாலை மட்டுமே உள்ளது, மற்ற அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என்று அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.