அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகளவில் கடந்த வாரத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


உலகளவில் கடந்த வாரத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகளவில் கரோனா பாதிப்பு பெரும்பாலான நாடுகளில் குறைந்தாலும் சீனாவில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது உலக மக்களிடையே சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கடந்த வாரத்துக்கான கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டதில் அதில், கரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் 8% அதிகரித்துள்ளதாகவும் உலகளவில் புதிதாக 1.1 கோடி கரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
அதேநேரத்தில் கரோனா பலி எண்ணிக்கை 17% குறைந்துள்ளது. கடந்த மூன்று வாரங்களாகவே கரோனா பலி குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் 43,000 பேர் இறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...