இலங்கையில் பேருந்து விபத்து: 32 பள்ளிக் குழந்தைகள் காயம்
இலங்கையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 32 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர்.


இலங்கையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 32 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர்.
இலங்கையின் வலஸ்முல்ல பகுதியில் பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற பேருந்து திடீரென மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 32 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் உடனடியாக வலஸ்முல்ல பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கல்விச் சுற்றுலாவை முடித்துக்கொண்டு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் 25 முதல் 31 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த 52 இருசக்கர வாகன விபத்துகளில் 53 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...