சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

உக்ரைன் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு...ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் திட்டம் 

அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கான நடைமுறை மீண்டும் தொடங்கப்பட்டு ஸெலென்ஸ்கியை அதில் பரிசீலிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
உக்ரைன் அதிபர்
Updated On :18 மார்ச் 2022, 10:17 am

DIN

2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு வழங்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக, அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவதற்கான நடைமுறையை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்க நோர்வே நோபல் குழுவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், "அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைக்கான நடைமுறையை மார்ச் 31, 2022 வரை நீட்டித்து, அதன் மூலம் அதிபர் ஜெலென்ஸ்கிக்கும் உக்ரைன் மக்களுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைக்கப்படுவதை அனுமதிக்க வேண்டும் என நோபல் குழுவை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோபல் பரிசு வெற்றியாளர்கள் குறித்த அறிவிப்பு அக்டோபர் 3 தொடங்கி 10 ஆம் தேதி வரை வெளியிடப்படும். 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு 251 தனிநபர்களும் 92 அமைப்புகளும் விண்ணப்பித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.