வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46.59 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 60.87 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலக அளவில் 223 நாடுகளில் கரோனா தொற்று பரவி அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது சில நாள்களாக தொற்று பாதிப்பு குறையத் உலக மக்களிடையே நம்பிக்கையை அளித்துள்ளது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து வேர்ல்டோ மீட்டர் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் உலக முழுவதும் 20,73,149 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 46,59,71,834-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 60,87,302 போ் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 39,77,62,163 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 62,12,23,69 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 63,485 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,13,50,883 -ஆகவும், பலி எண்ணிக்கை 9,96,072- ஆகவும் உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,30,03,767-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,16,312 பேர் பலியாகியுள்ளனர்.
தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,95,27,640-ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 6,56,487 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இதையும் படிக்க | ஆசியாவில் கரோனா தீவிரமடைவது மற்ற நாடுகளுக்கான எச்சரிக்கை மணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

