புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ரஷியாவுக்கு எதிராக உலக மக்கள் போராட வேண்டும்: உக்ரைன் அதிபர்

உலக மக்கள் அனைவரும் ரஷியாவுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

News image

உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

Updated On :24 மார்ச் 2022, 3:00 am

உலக மக்கள் அனைவரும் ரஷியாவுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தொடரும் இந்த போரில் ராணுவ வீரர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியப் படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

போர் தொடங்கி ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், ரஷியாவால் நடத்தப்படும் போர் உக்ரைனுக்கு எதிரானது மட்டுமல்ல, சுதந்திரத்திற்கு எதிரானது எனத் தெரிவித்து உக்ரைன் அதிபரின் காணொலியை வெளியுறவித் துறை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் காணொலியில் பேசியதாவது:

“உக்ரைன் நாட்டையும், சுதந்திரத்தையும் ஆதரிக்க அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், வீடுகளிலிருந்து அனைத்து மக்களும் இன்று தெருக்களுக்கு வாருங்கள்.

போரை நிறுத்த வலியுறுத்தும் அனைத்து உலக மக்களும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

இதற்கிடையே ரஷியாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.