உக்ரைனுக்கு ராணுவ உதவியை வழங்குங்கள்: நேட்டோ உச்சிமாநாட்டில் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வேண்டுகோள்

உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களையும், ராணுவ உதவிகளையும் வழங்குமாறு அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி நேட்டோவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு ராணுவ உதவியை வழங்குங்கள்: நேட்டோ உச்சிமாநாட்டில் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வேண்டுகோள்


உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களையும், ராணுவ உதவிகளையும் வழங்குமாறு அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி நேட்டோவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள நிலையில், ரஷிய அதிபா் புதினுக்கு நெருக்கடியை அதிகரிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக நேட்டோ அமைப்பின் அவசரக் கூட்டம் பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், அதிபா் புதினுக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கூட்டத்துக்குப் பின்னா், ரஷிய படையால் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிா்கொள்வதற்காக உக்ரைனுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க நேட்டோ தலைவா்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பொ்க் தெரிவித்தாா்.

இதற்கிடையே, நேட்டோ உச்சிமாநாட்டில் புதன்கிழமை இரவு விடியோ மூலம் நாட்டு மக்களுக்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி உரையாற்றினாா். அப்போது, உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களையும் ராணுவ உதவிகளையும் வழங்கி ரஷியாவுக்கு எதிரான போரில் வெற்றி கொள்ளவும், உக்ரைனில் அமைதியை மீட்டெடுப்பதற்கு முழுமையான கட்டுபாடற்ற ஆதரவை வழங்க வேண்டும் என நேட்டோ நாடுகள் அறிவிக்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.

மேலும் ரஷியா "அதன் முழு ஆயுதங்களையும் உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்துகிறது".

"உங்கள் அனைத்து விமானங்களிலும் 1 சதவிகிதம் அதன் முழு ஆயுதங்களையும்  உக்ரைனுக்கு வழங்குமாறும், “அவை எங்களிடம் இருக்கும்போது, ​​​​உங்களைப் போலவே அது எங்களுக்கும் 100 சதவிகித பாதுகாப்பை அளிக்கும் என்று நேட்டோவிடம் வலியுறுத்தினார். 

உக்ரைனுக்கு பல ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் தேவைப்படுகின்றன, "இது இல்லாமல் இதுபோன்ற போரில் உயிர்வாழ முடியுமா?" என்று கேள்வி எழுப்பியவர், வியாழக்கிழமை காலை ரஷியப் படைகள் பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தியது, இதில், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இருவரும் கொல்லப்பட்டனர். 

கடந்த மாதத்தில் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 10 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதை நேட்டோ தலைவர்களுக்கு நினைவூட்டிவர், மேலும் இதுதொடர்பான "தெளிவான பதில்களை" அளிக்குமாறு நேட்டோ அமைப்பிடம் வலியுறுத்தினார்.

நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துகொள்வதற்கான எந்தவித கோரிக்கையும் ஜெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தவில்லை.

ரஷியப் படைகள் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல்கேரியா, ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவில் உள்ள கிழக்குப் பகுதியில் படைகளை நிலைநிறுத் நேட்டோ முடிவு செய்துள்ளது. 

உக்ரைன் மீது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ரஷியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், உக்ரைனின் மரியுபோல் துறைமுக நகரம் அருகே அஸோவ் கடலில் நிறுத்தப்பட்டிருந்த ரஷிய கப்பல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com