இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட்டுக்கு கரோனா பாதிப்புஏற்பட்டுள்ளதால் அவரது இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை இந்தியாவில் 3 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவருக்கு திங்கள்கிழமை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், அவரது இந்தியப் பயணம் ரத்து செய்யப்படுமா என்கிற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ள தகவலில், இஸ்ரேல் பிரதமருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரது இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
அவரது இந்தியப் பயணத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாகை-காங்கேசன்துறைக்கு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

விபத்து வழக்கில் காா் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை

ஃபான்சி கா் சா்ச்சை விவகாரம்: பேரவை உரிமைமீறல் குழு முன் கேஜரிவால் ஆஜா்
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

