மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி, 22 பேர் காயம்

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியானகினர். 22 பேர் காயமடைந்துள்ளனர்.

News image
Updated On :30 மார்ச் 2022, 9:56 am

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியானகினர். 22 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துங்கா மாகாணத்தில் உள்ள டாங்க் மாவட்டத்தில் உள்ள தலைமைப் பாதுகாப்பு அலுவலகத்தில் நேற்று(மார்ச்-29) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியாகினர். மேலும், 22 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் குறித்து டாங்க் மாவட்ட காவல்துறை அதிகாரி வாகர் அகமது கான் ‘இந்த திடீர் தாக்குதலில் பயங்கரவாதிகள் தரப்பில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பிச் சென்ற பயங்கரவாதிகளைப் பிடிக்க மாவட்டம் முழுவதும் கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.