இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அரசு பெரும்பான்மையை இழந்தால் அதுகுறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அரசு பெரும்பான்மையை இழந்தால் அதுகுறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது.
பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது நாடாளுமன்ற கீழவையில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதனிடையே, கூட்டணி கட்சியான எம்.கி.எம் கட்சி இம்ரான் கான் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது.
இதனால், நம்பிக்கையில்லா தீா்மானம் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னரே இம்ரான் கான் அரசுக்கு பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஷேக் ரஷீத் ’பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதம் வியாழக்கிழமை (மாா்ச் 31) தொடங்கும்’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...